திருச்சியிலிருந்து உள்நாட்டு விமான சேவைகளை பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனம் தமது சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு சேவைகளாக சிங்கப்பூருக்கு இண்டிகோ நிறுவனம் சேவை வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே சென்னையில் இருந்து திருச்சிக்கு தினம்தோறும் மூன்று விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் இயக்குகிறது.
இந்த நிலையில் வருகிற 30ம் தேதி முதல் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு இரவு 9 மணிக்கு வரும் இண்டிகோ விமானம் மீண்டும் சிங்கப்பூருக்கு இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு செல்லும் இந்த விமானம் மீண்டும் மறுநாள் காலை 10 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்து இரவு 10:55 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டுச் செல்லும் இதனால் திருச்சியில் இருந்து சென்னைக்கும் திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கும் மேலும் ஒரு விமான சேவை கிடைத்திருப்பது திருச்சி விமான நிலையத்தின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.