ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் வனிதா(வயது 23). நிறைமாத கர்ப்பிணியான இவர், மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது ஓடும் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவரச கால மருத்துவ நிபுணர் செல்வசாந்தி பின்னர் தாய் சேய் இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.