திருச்சி மத்திய சிறை முகாமிலிருந்து  பல்கேரிய நாட்டு கைதி தப்பிப்பதற்கு முன்பு அறையில் இருந்த இரும்பு ஜன்னலை அறுத்துள்ளார் 

0 487
Stalin trichy visit

திருச்சி மத்திய சிறைச்சாலையில் உளல சிறப்பு முகாமில் இருந்து பல்கேரியா நாட்டை சேர்ந்த கைதி இலியான் அட்ரகவ் மார்கோவ் ( 53) என்பவர் தப்பி ஓட்டம் பிடித்தார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஆன்-லைன் மூலம் பணமோசடி செய்த வழக்கில் சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.

கோர்ட்டு உத்தரவுப்படி திருச்சி சிறை முகாமில் கடந்த 10.8.2019 அன்று அடைக்கப்பட்டார். திருச்சி கே.கே.நகர் போலீசில் கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் மண்டல தனித்தாசில்தார் ஜமுனாராணி கொடுத்த புகாரின் பேரில், 31-ந் தேதி காலை 7.30 மணி முதல் கைதியை தப்பியதாக கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்த சம்பவத்தில் கைதி இலியான் அட்ரகவ் மார்கோவ், கடந்த சனிக்கிழமையன்றே தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி முகாம் சிறைக்கு தினமும் டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டுவந்து தொட்டியில் நிரப்பி செல்வது வழக்கம். அந்த வேளையில், சினிமா பாணியில் கைதி லாரியில் பதுங்கி தப்பிச் சென்றது தெரியவந்தது.

முகாம் சிறை வளாகத்திலும், சிறைக்கு வெளியே உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை சிறைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே இலியான் அட்ரகவ் மார்கோவ், தண்ணீர் லாரியில் தப்பிச்செல்லும் முன்பு, சிறை அறையில் இருந்து எப்படி வெளியே வந்தார்? என்றும், அவரை பற்றிய பின்னணி தகவலும் வெளியானது.

அதாவது இலியான் அட்ரகவ் மார்கோவ், சிறப்பு முகாமில் அறை எண்:20-ல் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு இரும்பு வலைபின்னப்பட்ட ஜன்னல் கம்பியை அறுத்து வெளியேறி, அதன்பின், தண்ணீர் லாரியை எதிர்பார்த்து அதில் பதுங்கியபடி தப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஜன்னல்.கம்பியை அறுக்கும் அளவுக்கு ஆஷாபிளேடு அவருக்கு எப்படி கிடைத்தது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தப்பிச்செல்ல காவலர்கள் யாரேனும் உதவினார்களா? என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

தப்பியோடிய கைதி இலியான் அட்ரகவ் மார்கோவை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், தயாளன், நிக்சன் ஆகியோர் தலைமையிலான 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமை முதல் சிறப்பு முகாமில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதல் அணியின் அதிகாரிகள், காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தப்பி ஓடிய கைதி, ரெயில் அல்லது பஸ் மூலமாக கேரளா மாநிலம் அல்லது பெங்களூர் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதைத்தொடர்ந்து கைதியின் புகைப்படங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்கள், எல்லைப் பாதுகாப்பு படைகளுக்கும், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டுள்ளது, மேலும் இலியான் அட்ரகவ் மார்கோவ்-ன் முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களும் சைபர் கிரைம் போலீசாரால் கண்காணிக்கப்படுகிறது.

மோசடி வழக்கில் கைதான இலியான் அட்ரகவ் மார்க்கோவ், பல்கேரியா நாட்டில் வக்கீலா பணியாற்றிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

மோசடியில் சிக்கிய அவருக்கு கேன்சர் நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக திருச்சி முகாம் சிறையில் இருந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அவ்வப்போது பரிசோதனை க்கு சென்று மருந்து மாத்திரைகளை பெற்று சென்றதும் தெரியவந்தது. அவர் மீதான வழக்கு நடத்தப்படாத நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. வழக்கு ஒருபுறம், நோய் மறுபுறம் மற்றும் மனைவி குழந்தைகளை பிரிந்து வாழும் சூழ்நிலை என மிகுந்த மன வேதனையில் முகாம் சிறையை விட்டு எப்படியாவது? தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு மேலோங்கியது. அதைத்தொடர்ந்து தனியறையில் தங்க வைக்கப்பட்டிருந்த, இலியான் அட்ரகவ் மார்க்கோவ் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி, சினிமா பாணியில் தப்பிச்சென்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.