மணப்பாறையில் ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் கூட்டம்….
திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இயங்கும், கே.டி.கே அரங்கில் ஏ.ஐ.டி.யு.சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது .
இக்கூட்டத்திற்கு அமைப்புச்சாரா தொழிலாளர் சங்க செயலாளர் நல்லுச்சாமி தலைமை வகித்தார் . உள்ளாட்சி பணியாளர்கள் சங்க துணைச் செயலாளர் ஜனசக்தி உசேன் முன்னிலை வகித்தார் . ஆட்டோ சங்க மாவட்ட துணைச்செயலாளரும் நகர்மன்ற உறுப்பினர் தங்கமணி தமிழக அரசு தொழிலாளர் நலன் மற்றும் திரன் மேம்பாட்டுதுறை,தமிழ்நாடு அமைப்புச்சாரா ஒட்டுனர்கள் மற்றும் தானியாங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர் நலவரியம் வழங்கி பாதுகாப்பு பெட்டகம் பெற்ற தொழிலாளர்களுக்கு வாழ்துக்களையும் நலவரியத்தில் பதிவு அவசியத்தையும் எடுத்துரைத்தார் .
ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட துணைச் செயலாளர் சுப்ரமணியன் ஒன்றிய அரசு 44 தொழிலாளர் சட்டத்தை 4 சட்ட தொகுப்பாக மற்றியதை எதிர்த்து தமிழ சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் 21,000 ரூபாய் வழங்க வலியுறுத்தி வருகிற 13ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று உரை நிகழ்தினர் . இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தங்கராசு , மாவட்ட குழு உறுப்பினர்கள் சௌக்கத்அலி, ரவிச்சந்திரன் , நகர்மன்ற உறுப்பினர் மனோன்மணி ராகுல், ராமசாமி, ராதாகிருஷ்ணன் , சின்னகண்ணு உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.