மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது

0 502
Stalin trichy visit

மாற்றுத் திறனாளி பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தெத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான (சுமதி) மாற்றுத் திறனாளி பெண்ணிடம் கடந்த 3 ஆண்டுகளாக அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 24) என்பவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பலமுறை மாற்றுத் திறனாளி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து உள்ளதாக கூறப்படுகிறது. தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் மாற்று திறனாளி பெண்ணும் உல்லாசத்திற்கு சம்மதித்துள்ளார். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட விஜயகுமார் உல்லாசம் அனுபவித்ததோடு மட்டுமின்றி அவரிடம் இருந்து மூன்றரை சவரன் நகை மற்றும் கொஞ்சம் கொஞ்சமாக சுமார் 2 லட்சம் வரை பணத்தையும் பெற்றுக் கொண்டு அதன் பிறகு திருமணம் செய்ய மறுத்ததோடு குடும்பத்தினருடன் சேர்ந்து மாற்று திறனாளி பெண்ணை தாக்கியதாவும் கூறப்படுகிறது. இதனால் எல்லா நிலையிலும் பாதிக்கப்பட்ட பெண் விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் புகாரின் பேரில் மகளீர் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.