ஏ.ஐ.டி.யு.சி. தூய்மைப்பணியாளர்கள் பாதுகாப்பு சங்க கூட்டம்
AITUC உள்ளாட்சி ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு சங்க கூட்டம் மணிகண்டம் ஒன்றியம் சோமரசம்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் நேற்று 22.2.2023 அன்று மாலை 4.00 மணி அளவில் பாப்பாத்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் ஏஐடியுசி சங்க மாவட்ட துணைச் செயலாளர் MR முருகன் கலந்து கொண்டு கூட்டத்தை வழி நடத்தினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன மார்ச் 2ல் மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நமது ஒன்றிய பகுதியில் இருந்து அனைத்து தோழர்களும் அவசியம் கலந்து கொள்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் S முத்தழகு, பெண்கள் கட்டட சங்க மாநில துணை ஒருங்கிணைப்பாளர் M மருதம்பாள், ஏஐடியுசி உள்ளாட்சி சங்க மாவட்ட துணை தலைவர் J நதியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு பஞ்சாயத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள் கூட்ட முடிவில் தோழர் ஜெயபால் நன்றி கூறினார்