குமுளூரில் வேளாண் திருவிழா கண்காட்சி – கருத்தரங்கம்
பிப்.23 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தில் உள்ள வேளாண்மை கல்வி நிறுவனத்தில் மாநில விரிவாக்க திட்ட உறுதுணை சீரமைப்பு திட்டம்,வேளாண்மை தொழில்நுட்ப வேளாண்மை முகமை சார்பில் லால்குடி வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் குமுளூர் வேளாண்மை கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் மரபியல் பன்முகத் தன்மையை மேம்படுத்தும் வேளாண் திருவிழா கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
இவ்விழாவில் லால்குடி வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் வரவேற்புரை ஆற்றினார்.திருச்சி வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன் தலைமை வகித்தார்.குமுளூர் வேளாண்மை கல்வி நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் சிறப்புரையாற்றி மியாவாக்கி அடர்வனக் காடுகள் வளர்ப்பு குறித்தும் எடுத்துரைத்தார். திருச்சி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மோகன் மரபியல் பண்முக தன்மை திட்டம் குறித்தும், பயிர் நோயியல் துறை டாக்டர் ராஜ்குமார் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் முறை நோய் கட்டுப்பாடு குறித்தும், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை டாக்டர் ஈஸ்வரன் தோட்டக்கலை பயிர்களின் இரகங்கள் வீட்டுத் தோட்ட காய்கறி சாகுபடி முறைகள் குறித்தும், மரபியல் துறை டாக்டர் தியாகு புதிய நெல் ரகங்களின் சிறப்பு இயல்புகள் குறித்தும், பூச்சியியல் துறை டாக்டர் விஜய் தேனி வளர்ப்பு குறித்தும்,.மண்ணியல் துறை டாக்டர் சிவரஞ்சனி அங்கக வேளாண்மை குறித்தும் மரபியல் துறை டாக்டர் வினோத் பாரம்பரிய நெல் ரகம் பற்றிய பார்வை குறித்தும், பயிர் நோயியியல் துறை டாக்டர் செலஸ்டீன் அந்தோணி அங்கக வேளாண்மையில் உயிர் உரங்களின் பங்கு குறித்தும் ,முன்னோடி இயற்கை விவசாயி ஸ்டீபன் கென்னடி நமது பகுதி கேற்ப பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து விளக்க உரையாற்றினார்.
இந்நிகழ்வில் முன்னோடி விவசாயிகள், உழவர் ஆர்வலர் குழு, தலைவர்கள் உறுப்பினர்கள் இயற்கை விவசாயிகள் பல முன்னோடி விவசாயிகள் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள்கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்த வேளாண்மை திருவிழாவில் கலந்து கொண்டஅனைவருக்கும் உணவு மற்றும் ஐந்து கிலோ மண்புழு உரம்,250 கிராம் பேசியல்ஸ் தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர்கள், வேளாண்மை உதவி அலுவலர்கள், அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் ஆகியோர் செய்திருந்தனர்.
இறுதியாக லால்குடி வேளாண்மை அலுவலர் செல்வி ஜனனி ஸ்ரீஜா நன்றியுரை ஆற்றினார்