சிறுகனூரில் இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியவர்  கைது

0 408
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் திருமணம் ஆகாத இளம்பெண்ணிடம் நீண்ட நாட்களாக பழகி ஆசை வார்த்தை கூறி கற்பமாக்கியவரை போலீசார் கைது செய்தனர்

சிறுகனூரைச் சேர்ந்தவர் 25 வயதான இளம்பெண்.இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.அதேபோல் திருப்பட்டூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் 36 வயதான மூர்த்தி.இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இளம் பெண்ணுடன் நீண்ட நாட்களாக பழகி வந்துள்ளார். இதில் இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் இருந்துள்ளார்.இதனால் அந்தப் இளம்பெண் கர்ப்பமடைந்துள்ளார். கர்ப்பத்தை கலைக்க மாத்திரை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.மாத்திரை சாப்பிட்டதால் அந்த இளம்பெண்ணுக்கு உடல் உபாதை ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 26 ஆம் தேதி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மீண்டும் 28ஆம் தேதி உடல் உபாதை ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் விசாரணை செய்ததில் அந்தப் பெண்ணை கர்ப்பமாக்கியது தெரியவந்தது.பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.