ஆளில்லாத வீட்டில் கிடந்த உலோகத்தாலான சுவாமி சிலை

0 292
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் .  துறையூர் அடுத்துள்ள ஒக்கரை பகுதியில் வசிப்பவர் நாகராஜ் இவர் அப்பகுதியில் தட்சு வேலை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் சிங்கத்தம்பூர் பகுதியில் பட்டவன் கோவில் அருகே பழமையான ஒட்டுவீடு வாங்கியுள்ளார் அதில் உள்ள ஓடுகள் மற்றும் களிகளை பிரித்து வைத்துள்ளார் அதனை எடுப்பதற்காக நேற்று அவர் அங்கு செல்லும்பொழுது அங்கு இருந்த குடிநீர் தொட்டியில்  மர்மபை ஒன்று கிடப்பதை கண்டார் அதனை எடுத்துப் பார்க்கையில் அதில்  உலோகத்தலான 4 கிலோ எடை உள்ள சக்ரதாழ்வார் சுவாமி சிலை இருப்பதை  கண்டு அதிர்ச்சடைந்தார் உடனடியாக அதை உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் ஒக்கரை பகுதியில் பெரும்பாலானோர் (கல் சிற்பம்) ஸ்வாமி சிலையை செய்யும் தொழில் செய்து வருகின்றனர் இதனால் மர்ம நபர்கள் யாராவது சாமி சிலையை கடத்தி வந்து இங்கு வைத்து உள்ளனரா என்று சந்தேக கோணத்தில் உப்பிலியபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave A Reply

Your email address will not be published.