உலை ஆயில் இல்லாமல் இயக்கப்படும் புதிய வகை ரயில் என்ஜின்கள்

0 258
Stalin trichy visit

உலை ஆயில் இல்லாமல் இயக்கப்படும் புதிய வகை ரயில் என்ஞின்கள் திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது…

திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனையில் தெற்கு ரயில்வே துறையின் கீழ் ரயில் என்ஜின்கள்,ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் இயங்குவதற்கு தேவையான பல பாகங்கள் இங்கு வடிவமைக்கப்பட்டு வருகிறது மேலும் ரயில் புணரமைப்பு பணிகளும் இங்கு நடைபெறும்.

அந்த வகையில் ஊட்டி மலைத்தொடர்களில் இயங்கி வரும் ரயில் என்ஜின்களை பொன்மலை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து உருவாக்கி தருகிறது – இதற்கு முன்பாக உலை ஆயிலை பயன்படுத்தி என்ஜினை ஸ்டார்ட் செய்யும் வகையில் ரயில் என்ஜின்கள் தயார் செய்யப்பட்ட வந்த நிலையில் தற்போது உலை ஆயிலை பயன்படுத்தாமல் ரயில் என்ஜினை ஸ்டார்ட் செய்யும் வகையில் புதிய ரயில் இன்ஜினை தயாரித்துள்ளது.

பொதுவாக ரயில் இன்ஜினை ஆன் செய்யும்போது ஏதாவது எண்ணெயில் தான் ஆன் செய்ய வேண்டும் – இதற்காக உலை ஆயில் ( ஃபெரான்ஸ் ஆயில் ) பயன்படுத்தப்பட்டு வருகிறது – அப்படி உலை ஆயிலை பயன்படுத்தி எஞ்சினை ஆன் செய்யும்போது அதிக அளவில் புகை எழும்பும், இதனால் உலை ஆயிலுக்கு மாற்றாக அதிவேக டீசல் பயன்படுத்தும் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் என்ஜின் தயாரிகி உள்ளது.

இந்த என்ஜினில் ஆன் செய்ய பயன்படுத்தப்படும் அதிவேக டீசலை இருப்பு வைத்துக்கொள்ள 1600 லிட்டர் கொள்ளளவு உள்ள டீசல் டேங்க் மற்றும் நிலக்கரி மூலம் நீராவி கொதிக்க வைக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் நிரப்பு 4500 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரயில் எஞ்சின் முன் பகுதியில் அதிக ஒளிரும் தன்மையுடைய டிஜிட்டல் விளக்குகளும்,அதே போல் என்ஜினில் உள்பகுதியில் எல்.இ.டி பல்புகளும் உள்ளது.

இந்த புதிய ரயில் என்ஜினை 9.30 கோடி மதிப்பில் 70 பேர் கொண்ட குழுவினர் கடந்த பிப்ரவரி துவங்கி ஏழு மாதங்களில் வடிவமைத்துள்ளனர் – இந்த என்ஞ்சின் இயக்கத்துக்கு பின்னர் இதில் காணப்படும் நிறை குறைகளை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த ரயில் என்ஜீன்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொன்மலை ரயில்வே பணிமனை  நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.