நள்ளிரவில் மண்டை ஓடு மாலையுடன் அகோரிகள் நடத்திய நவராத்திரி பூஜை

0 430
Stalin trichy visit

திருச்சி அரியமங்கலத்தில் நள்ளிரவில் மண்டை ஓடு மாலையுடன் அகோரிகள் நடத்திய
நவராத்திரி பூஜை – சங்கு,டம்ரா மேளங்கள் முழங்க காளிக்கு நடத்தப்பட்ட பூஜை …

திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோரகாளி கோவில் உள்ளது,இதனை காசியில் அகோரி பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் என்பவர் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார்.

இங்கு சனிக்கிழமை, அமாவாசை,பௌர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேச காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இந்தாண்டு நவராத்திரி விழா தொடங்கிய முதல்நாள் முதல் சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக இன்று ஜெய் அகோரகாளிக்கு குருதி அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அகோரிகள் உடல் முழுவதும் திருநீறு பூசி கொண்டு சிறப்பு யாக பூஜை நடத்தினர் – நள்ளிரவில் நடைபெற்ற மகா ருத்ரா யாகத்தின் போது அகோரி மணிகண்டன் மண்டை ஓடு மாலை அணிந்து கொண்டு ருத்ராட்ச மாலைகளை உருட்டியபடி மந்திரங்களை ஜெபித்து நவதானியங்கள், பழவகைகள் உள்ளிட்ட பொருட்களை அக்னி குண்டத்தில் இட்டு யாக பூஜை செய்தார்.

அகோர காளி, அஷ்டகாலபைரவர் மற்றும் அங்குள்ள தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடந்தது.

இந்த யாக பூஜையின் போது சக அகோரிகள் டம்ராமேளம் அடித்தும், மற்றும் சிவவாக்கியம் வாசித்தும், சங்குமுழங்கியும், மந்திரங்களை ஓதினர். இதில் அகோரிகள்,பெண் அகோரிகள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

காளியை வணங்கக்கூடிய பக்தர்கள் சிலர் அகோரிகளாக தங்களை மாற்றிக்கொள்ள இந்த மடத்தில் சேர்ந்து தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.