தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் மாயம்
திருச்சி, மார்ச்.26 திருச்சி துறையூர் ஆண்டாளம்மன் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47. ) மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் கடந்த 24ந் தேதி மன உளைச்சலில் இருந்த சிவக்குமார் உடல் நலம் பாதிக்கப்பட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவருடன் அவரது மகள் இலக்கியா (வயது24) உடன் இருந்தார். இந்நிலையில் 24 தேதி சிவக்குமார் மருத்துவமனையில் இருந்து மாயமானார். இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.