சாலை பயனீட்டாளர்களின் வேண்டுகோள்….
திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் மற்றும் கோட்ட பொறியாளர் மா.நெடுஞ்சாலை துறை அவர்களின் மேலான பார்வைக்கு…
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து காவேரி பாலத்தின் இடது புறத்தில் அமைந்துள்ள திருவளர்ச்சோலை மற்றும் பனையபுரம் வழியாக கல்லணை செல்லும் சாலையில் சமீப காலமாக நடை பெறும் தொடர் விபத்துகளால் இறப்பு மற்றும் கொடுங்காயங்களால் அப்பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளர்கள் மற்றும் சாலை பயனீட்டாளர்களால் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகிறார்கள்.
தொடர்ந்து நடைபெறும் விபத்துகளால் சமீப காலமாக இச்சாலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட்டு போக்குவரத்தும் பல மணி நேரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இச்சாலையில் கடந்த வாரத்தில் ரேக்ளா போட்டிக்காக வாகன வேகத்தை குறைக்கும் வேகத்தடைகளும் அகற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட விடயத்தில் கவனம் செலுத்தி வரும் நாட்களில் இச்சாலையில் பயனீக்கும் சாலை பயனீட்டாளர்களின் சாலை பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டுகிறோம்.