திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட புதியவஸ்திரங்கள்…..

0 363
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் கோயிலில் கைசிக ஏகாதசி திருநாள் அன்று மூலவர் பெருமாள் , உற்சவர் நம்பெருமாள் , மூலவர் ஸ்ரீ தாயார், உற்சவர் ஸ்ரீரெங்கநாயகித் தாயார்க்கு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து புதியவஸ்திரங்கள்,புதிய குடைகள் வருடம்தோறும் கொண்டு வரப்படும். இவ்வாண்டு கைசிக ஏகாதசியான இன்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிய வஸ்திரங்கள், குடைகள் கொண்டு வந்து ஸ்ரீரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க புறப்பட்டு கருடாழ்வார் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்துவிடும் வழங்கப்பட்டது.

கைசிக ஏகாதசியான இன்று பெருமாளுக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வழங்கப்படும் புதிய ஆடைகள் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.