மாணவர் சேர்க்கையில் தீவிர பணியாற்றும் பள்ளித் தலைமையாசிரியை

31.05.2023- பணி நிறைவு இன்னும் பணியிலிருந்து விடைபெற ஆறு
நாட்களை என்ன செய்யலாம் யாரை எல்லாம் சந்திக்கலாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்கலாம்,
ஆனால் அந்த நல்லூர் ஒன்றியம் ஸ்ரீரங்கம் .ஸ்ரீகாஞ்சியம்மன் நகராட்சி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் ரீட்டா மேரி இம்மாதம் முழுவதும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல்
தன்னார்வலர்களுடன் வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கையை நிகழ்த்தி வருகின்றார். பள்ளி செல்லாக் குழந்தைகளையும் கண்டறிந்து தகவல் அளித்து வருகின்றார்.
35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியும் கடைசி ஆறு நாட்களையும் பள்ளியின் நலனுக்கு எதிர்கால கல்வியின் நலனுக்காக செயல்படும்.
இவரைப் போன்ற அரசுப் பள்ளியின் ஆசிரியர்களால் தான் ஏழைகளின் கல்வி இன்றும் உறுதி செய்யப்படுகின்றது.