பா.ஜ.க. அரசை அகற்ற சி.பி.ஐ, தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடைபயணம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மருது தலைமையில் பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் என்று நாடு தழுவிய நடை பயணம் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் பேரணியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் பேரணியில் பாஜக அரசு அகற்றுவோம் இந்தியாவை பாதுகாப்போம் என்று வாசகங்கள் எழுதிய பதாகைகள் உடன் பேரணி துவங்கியது ஆர்எஸ்எஸ் இந்துத்துவா கும்பலில் முகமூடியாக இருந்து ஜனநாயக விரோத ஆட்சி நடத்தும் பாஜக அரசை அகற்றிடவோ பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் அரிசி பருப்பு எண்ணெய் முதல் காய்கறி பால் என்று அனைத்து உணவு பொருளிலும் உயர்வால் மக்களை நசுக்கும் பாஜக அரசை அகற்றிடுவோம்
கருப்பு பணத்தை மீட்பதாக பண மதிப்பு இழப்பை அமுல்படுத்தி ஏழை எளிய நாட்டு மக்களை வங்கி ஏடிஎம்மில் அலையவிட்டு நடுத்தெருவில் நிக்க வைத்து கருப்பு பணத்தை மீட்க பாஜக அரசை அகற்றுவோம் புதிய கல்விக் கொள்கை புதிய தொழில் சட்ட திருத்தம் புதிய வேளாண் சட்ட புதிய மின்சாரம் திருத்த சட்டம் புதிய வன பாதுகாப்பு சட்டம் புதிய மோட்டார் வாகன சட்டம் மத்திய உணவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் நாட்டு மக்களை ஏமாற்றி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகார வர்க்கத்திற்கும் விசுவாசம் காட்டும் பாஜக அரசே அகற்றுவோம் என்ற கோஷங்களுடன் பேரணையானது உப்பிலியபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வெங்கடாசலபுரம் வரை சென்றது என் நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் திருவரம்பூர் தாலுகா செயலாளர் பழனிச்சாமி ஆகியோஸ் கலந்து கொண்டனர் மேலும் ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணி ஒன்றிய துணை செயலாளர் சந்திரசேகர் ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் ஒன்றிய குழு தங்கராஜ் கிளைச் செயலாளர் சின்னசாமி உள்பட சிபிஐயினர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்