கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவன்…!

0 51
National

சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் மேத்யூ சகாயராஜ். இவரது மகன் ஸ்டாலின் ரோஜன் (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் உயர்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை ஸ்டாலின் ரோஜனும், அவரது நண்பர்கள் சிலரும் போக்குவரத்து நகரில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது, ஸ்டாலின் ரோஜன் கிணற்றின் ஆழமான பகுதிக்கு சென்றபோது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கத் தொடங்கினார். இதை கண்ட அவரது சக நண்பர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். மேலும், இதுகுறித்து சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மாணவர் ஸ்டாலின்ரோஜனை பிணமாக மீட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!