அரசு வாகனத்தின் மீது செருப்பு வீசிய பாஜகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

0 117
National

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தேசிய கொடி பொருத்திய அரசு வாகனத்தின் மீது செருப்பு வீசிய பாஜகவினரை கண்டித்து , அமைச்சர்  கே.என்.நேரு மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளர்  க.வைரமணி மற்றும் திருச்சி மேயர்- மு.அன்பழகன் , தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர்  டிஆர்பி ராஜா மற்றும் மாநில துணை செயலாளரும் கிழக்கு மண்டல பொறுப்பாளர்  கேசவன் ஆலோசனைப்படி திருச்சி மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர்  M.பழனியாண்டி  தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண், மாவட்ட தகவல் துணை ஒருங்கிணைப்பாளர்கள் சூர்யா,ஜெயசெலின். தொகுதி ஒருங்கிணைப்பாளர் திருச்சி லட்சுமணன்,கோவிந்தசாமி முன்னிலையில் நடைபெற்றது. கண்டன முழக்கங்களை தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர்கள்‌ எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!