நெ 2 கரியமாணிக்கம் சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெம்பர் 2 கரியமாணிக்கத்தில் மோட்டார் பைக் மீது அரசு பேருந்து மோதிய விமத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

முசிறி தாலுக்கா குணசீலம் வடக்குகுடி தெருவைச் சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் 36 வயதான முருகதாஸ். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் டிவி மெக்கானிக் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக தனது பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து குணசீலத்தில் உள்ள வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது நம்பர் 2 கரியமாணிக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து மோட்டார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வாலிபர் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..