திருச்சியில் ஒருங்கிணைந்த விதைசான்று மையம்… அடிக்கல் நாட்டினார் அமைச்சர் நேரு!…

திருச்சி. மார்ச் 26.03.23. திருச்சியில் ரூபாய் 2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த விதை சான்று மைய கட்டிட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
திருச்சி, அரியலுார், பெரம்பலுார் ஆகிய பகுதிகளைச் சார்ந்த விவசாயிகளின் சுமையைக் குறைக்கும் வகையில், திருச்சி மாநகரில் ஒருங்கிணைந்த விதைச்சான்று மையம் அமைக்கப்படும் என்று 2021 விவசாய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டாலும், அதற்கான நிதி ஒதுக்குவதில் தாமதம் இதுவரை நீடித்தது.
இந்நிலையில் ஒருங்கிணைந்த விதைச்சான்று மையத்தை கட்டுவதற்கான நிதியை சமீபத்தில் ஒதுக்கியது. இந்த அறிவிப்பு திருச்சி, அரியலுார், பெரம்பலுார் மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்த நிலையில், ஒருங்கிணைந்த மையமானது அனைத்து தேவைகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரும் எனத் தெரிவித்த அதிகாரிகள், விதை தர மதிப்பீட்டை எளிதாக்குவதே இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகவும் இருக்கும் என்றும், இது மத்திய பகுதியில் உள்ள இயற்கை விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,


click the image to chat on whatsapp
திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் ரூபாய் 2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த விதைச் சான்று மையக் கட்டிடத்திற்கான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.