கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

0 316
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (45) இவரது சகோதரி தமிழ்ச்செல்வி (35). இவருக்கு மாப்பிளை சரியாக அமையாததால் திருமணமாகாமல் அண்ணனுடன் வசித்து வந்துள்ளார் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வெளியே சென்று விட்டு வருவதாக வீட்டில் இருந்து கடந்த 14ஆம் தேதி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
நடராஜன் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில் ஆதி அப்பன் என்பதற்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு பெண் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்று பார்த்த போது அது நடராஜனின் தங்கை தமிழ் செல்வி என்பது உறுதி செய்யப்பட்டது இதை எடுத்து உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவல் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து நடராஜன் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.