வரதட்சனை கொடுமை ஆறு பேர் மீது வழக்கு பதிவு

0 333
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் புத்தனாம்பட்டி அபிநமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தனா (30). இவருக்கும் பாண்டிச்சேரி மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த சண்முகம் என்பதற்கும் கடந்த பிப்ரவரி மாதம் 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் சண்முகம் தொடர்ந்து கீர்த்தனாவை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார் அதிலும் ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதற்கு அவற்றை முழு தொகையும் கொடுத்து வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் சண்முகத்தின் உறவினர்களும் சேர்ந்து கீர்த்தனாவை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் கீர்த்தனா ஜியோபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார் அதன் அடிப்படையில் காவல்துறையினர் சண்முகம் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.