சாலை விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

0 506
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெம்பர் 2 கரியமாணிக்கம் திருச்சி சேலம் சாலையில் கார் மீது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் காரை ஓட்டி வந்தவர் கணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
உடன் வந்த மனைவி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி நகர் ராகவேந்திரா இல்லம் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான மதியழகன். இவர் கடந்த 28 ந்தேதி தனது மனைவியுன் காரில் முசிறியிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நம்பர் 2 கரியமாணிக்கம் திருச்சி சேலம் நெடுஞ்சாலை வந்து கொண்டிருந்தபோது கார் மீது எதிரே வந்த லாரி எதிர்பாராதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மதியழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த அவரது மனைவி 45 வயதான செல்வி என்கின்ற தமிழ்ச்செல்வி படுகாயம் அடைந்தார். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த பெண்ணை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இந்நிலையில் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வி திருச்சி தனியார் மருத்துவமனையில் தமிழ்ச்செல்வி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.