வயலுக்கு சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
திருச்சி, நவ.8 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரெங்கம்மாள் (66) இவர் பச்சபெருமாள் பட்டி பகுதியில் வசிக்கும் தனது மகள் மல்லிகாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அருகிலுள்ள ஆழத்துடையான்பட்டியில்ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு பயிர் நடவு பணி செய்வதற்காக சென்று உள்ளார் ரங்கம்மாள் வயலில் உள்ள வரப்பில் நடந்து செல்லும் போது அங்குள்ள சேற்றில் வழுக்கி அருகே இருந்த மின்சார பெட்டியின் மீது தவறி கை வைத்துள்ளார். உடனே அதிலிருந்து மின்சாரம் ரெங்கம்மாள் மீது பாய்து ரங்கம்மாள் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
இதுகுறித்து உப்பிலியபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரங்கம்மாள் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்