மரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர் சிசிச்சை பலனின்றி உயிரிழப்பு

0 328
Stalin trichy visit

திருச்சி, ஏப்.9  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூரில் புளியம்பழம் சேகரிப்பதற்காக மரத்தில் ஏறிய வாலிபர் தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் 38 வயதான மோகன். இவர் கடந்த 2 ம் தேதி காட்டூர் பகுதியில் உள்ள ஒரு புளியமரத்தில் புளியம்பழம் சேகரிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலிதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.