துறையூரில் முத்தூட் நிறுவனத்தினர் கொண்டு சென்ற ரூ.77 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

0 410
Stalin trichy visit

திருச்சி, ஏப். 9  திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கண்ணனூர் கருப்பு கோவில் அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன ஆய்வில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்த போது அவரிடம் உரிய ஆவணங்களின்ன்றி வைத்திருந்த ரூபாய் 77 ஆயிரத்து 950 ரூபாய் இருந்தது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை செய்ததில் அவர் துறையூர் முத்தூட் நிறுவனத்தில் பணிபுரிவதும், வாரக் கடனை வசூல் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கையில் எந்த ஆவணங்களும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் துறையூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன் இடம். ஒப்படைத்தனர். பணத்தை சரிபார்த்து துறையூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை ஒப்படைத்து தங்களது பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.