வறுமைச் சூழலிலும் தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்த இளைஞர்

0 316
Stalin trichy visit

திருச்சிமாவட்டம் துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டி கிராமம்,
500 ரூபாய் வாடகையில் சிறிய குடிசை வீடு.
ஒருவேளை சாப்பாட்டுக்கே பஞ்சம்.
தந்தை இல்லை. தாய் கல் உடைக்கும் தினக்கூலி, வீட்டில் மொத்தம் ஐந்து பிள்ளைகள்.
இச்சூழலிலும் கூட ராஜேஷ் என்ற இந்த இளைஞர் சத்தமே இல்லாமல் சாதித்து நம் நாட்டிற்கு பெருமை தேடித் தந்திருக்கிறார்.
கத்தாரில் நடைபெற்ற ‘டெக்காத்லான்’ தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார் இராஜேஷ்.
டெக்காத்லான் என்பது லேசுபட்ட காரியமில்லை ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல்,வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற பத்துவிதமான போட்டிகள் கொண்டதே டெக்காத்லான்.
இதில்தான் சாதித்திருக்கிறார் நம் தமிழன் இராசேசு.
இவரின் கனவு “ஒலிம்பிக்கில் தங்கம்” வாங்கி நாட்டை பெருமைப்படுத்த வேண்டுமென்பதே.
நீ கண்டிப்பாய் வாங்குவாய் சகோதரா! இவர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படித்தவர் என்பது கூடுதல் தகவல்

Leave A Reply

Your email address will not be published.