மண்ணச்சநல்லூரில் பல்வேறு கடைகளில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது
.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் 5 க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கடைகளில் இருந்த பணம் திருட்டு போனது. இந்தக் கடைகளின் பூட்டுகளை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மண்ணச்சநல்லூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 5 க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதில் ஆனந்த நகரை சேர்ந்தவர் 52 வயதான அன்பழகன்.இவர் எதுமலை பிரிவுரோடு அருகே பால் கடை வைத்துள்ளார். இவரது கடையின் பூட்டை உடைத்து ரூ 2,900 பணம், வடக்கு எரி மெஷின் தெருவைச் சேர்ந்த மீரா மொய்தீன் என்பவர் செருப்பு கடையில் ரூ.2000 மும் திருட்டுப் போனது. இதே போல மேலகாவல்கார தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது கடையில் ரூ.1700 ம் அனுமார்கோவில் தெருவைச் சேர்ந்த சாமுவேல்ராஜ் என்பவரின் பழ கடையில் ரூ.2500 ம்,சாலப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த கோகுல்ராஜ் காப்பி கடையில்ரூ.1000 மு் திருட்டு போனது. இந்த சம்பவம் தொடர்பாக தனித்தனியாக வந்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.