ஏ.பி.வி.பி. புதிய நிர்வாகிகள் தேர்வு
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் சார்பில் திருச்சி சீனிவாச நகர் சரஸ்வதி பால மந்திர் பள்ளியில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் மாநில அமைப்புச் செயலாளர் சின்னா ஸ்ரீராம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியபொழுது, 55 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய மாணவர் அமைப்பாக ABVP திகழ்கிறது. மேலும்,அறிவு ஒழுக்கம் ஒற்றுமையின் அடிப்படையில் மாணவர்களிடையே தேசபக்தியை வளர்த்து விவேகானந்தரை இலட்சியமாக எடுத்துச் செல்லும் அமைப்பு ABVP. இந்த புதிய நிர்வாகிகள் தேர்வில்,திருச்சி மாநகர தலைவராக Dr.அருண்பிரகாஷ், மாநகர செயலாளராக B.ஸ்ரீராம் தேர்வு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ஸ்ரீராம் பேசுகையில், கல்வித் துறையின் பிரச்சனைகளைத் தீர்க்க தன்னால் முடிந்தவரை முயற்சி எடுப்பேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் Dr.கார்த்திகேயன்,மாநில இணைச் செயலாளர் சந்தோஷ் குமார், கோட்ட அமைப்புச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் மாணவத் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று ABVP திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.