தேசிய நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் மோதி விபத்து
திருச்சி, ஜுன் 5 திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சி புறவழிச்சாலையில் வெங்கட்நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே நள்ளிரவு கடலூரில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த டொயோட்டா காரின் பின்புற டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சென்ட்ரல் மீடியினில் மோதி மறுபக்க எதிர் சாலைக்குச் சென்று விபத்துக்குள்ளானது. அப்போது தூத்துக்குடியில் இருந்து பண்ருட்டி நோக்கிச் சென்ற லாரி திடீரென கார் மறுபக்க சாலையில் இருந்து வந்த காரைப்பார்த்து வேகத்தை குறைத்து போது லாரியின் பின்னே வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள், ஆம்னி பேருந்து என 4 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்து துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. துவரங்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.