‘கோப்ரா’ பட ப்ரோமோஷனுக்காக இன்று திருச்சி வந்த நடிகர் விக்ரம்!

0 422
Stalin trichy visit

நடிகர் விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி செட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிப்பில் வரும் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது கோப்ரா திரைப்படம்.இந்த படத்தின் ப்ரோமோஷன் ஜோசப் கல்லூரியில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தார் நடிகர் விக்ரம்.இவர்களை வரவேற்க ரசிகர்கள் விமான நிலையத்தில் கூடியிருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விக்ரமைப் பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.அப்போது அங்கிருந்த மத்திய பாதுகாப்பு படையினருக்கும், ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்புடன் ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.