போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசனை

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகர காவல் ஆணையர்கள் ஸ்ரீதேவி, சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.