பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ கண்காட்சியில் பங்கேற்ற வேளாண் கல்லூரி மாணவிகள்

0 208
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 13  திருச்சியில் நடைப்பெற்ற பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ மாபெரும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்ற வேளாண் கல்லூரி மாணவிகள்

திருச்சி மாவட்டத்தில் , மார்ச் 7 முதல் 9 ஆம் தேதி  வரை, கலையரங்கம் (சென்டரல் பேருந்து நிலையம்) அருகில் மாபெரும் வேளாண் கண்காட்சி நடைப்பெற்றது.
இக்கண்காட்சியில்  திருச்சி மாவட்டம் , எம். ஆர். பாளையத்தில் உள்ள நாளந்தா வேளாண்மை கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவிகளான செ.லோகபாரதி, செ.மாஜிதா, சீ.இனியா, இ.கீர்த்திகா, மு.முத்துராஜலெட்சுமி, ப.நந்தினி, ஹ.நித்தியஸ்ரீ, இ.ஓவியா, த.பிரதீபா, த.கு.பிரீத்திகா, ர.ரபிதாஸ்ரீ, ம.சகுந்தலாதேவி மற்றும் மு.திலகவதி ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ்  கலந்துக் கொண்டு; பலன்தரும் அரங்குகள், பயனுள்ள கருத்தரங்குகள், வேளாண் நிபுணர்களின் வழிகாட்டல்கள் மற்றும் வெற்றி விவசாயிகளின் அனுபவப் பகிர்வுகளை அறிந்து கொண்டனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பண்ணை இயந்திரங்கள், இயற்கை இடுபொருள்கள், நீர்பாசம், தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், சோலார் பம்ப்செட், வங்கிகள், ஒருங்கிணைந்த பண்ணையம், சொட்டுநீர்ப் பாசனம், பாரம்பரிய விதைகள், நாற்றுப் பண்ணைகள், வேளாண் கல்வி நிறுவனங்கள் போன்ற பல்வேறு ஸ்டால்கள் இருந்தன. இதன் மூலமாக வேளாண் துறையின் பல்வேறு தகவல்களை வேளாண் கல்லூரி மாணவிகள் அறிந்துக் கொண்டு பயன் பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.