பஞ்சக்காவியம் தயாரித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்
திருச்சி, ஆக.12 விவசாயிகளுக்கு பஞ்சகாவியம் தயாரித்து செயல் முறை விளக்கம் அளித்த வேளாண்மை கல்லூரி மாணவிகள்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியத்தில் வேளாண்மை கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் விவசாயிகளுக்கு பஞ்சை காவியம் தயாரித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் கிராம பகுதிகளில் தங்கி விவசாயிகளுடன் பல்வேறு நேரடி களப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தொட்டியத்தில் வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் நா.வர்ஷா,பா. அபிநயா,பா. ப்ரீத்தி,ரா. யாழினி சக்தி, அனுசியா ஆகியோர் பஞ்சகாவியம் தயாரித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.