திருச்சி ஜங்சனில் நாசவேலை தடுப்பு சோதனை

0 216
Stalin trichy visit

திருச்சி, ஆக.12   சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக,  நேற்று திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு சார்பாக, திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது

தெற்கு ரயில்வே  IRPFS ,  முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் K .அருள் ஜோதி  உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர்  பிரசாந்த் யாதவ், ஐ.ஆர்.பி.எஃப்.எஸ். மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர், & திருச்சி RPF ஆய்வாளர் அஜய் குமார்ஆகியோர்களது மேற்பார்வையில், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு  சரவணன் உதவி ஆய்வாளர்,  தலைமையில்,நேற்று  திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை,உதவி சப் இன்ஸ்பெக்டர் குருநாதன், வெடிகுண்டு தடுப்பு பிரிவு சங்கர்,கணேசன், & மணிகண்டன் , இணைந்து  சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது,
சோதனையின் போது, ​​ரயில்வே வளாகத்திலும் ரயிலிலும் சந்தேகத்திற்கிடமான, குற்றஞ்சாட்டக்கூடிய, வெடிக்கும் பொருட்கள் & எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை .

Leave A Reply

Your email address will not be published.