நெ.2.கரியமாணிக்கத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தொடக்க விழா

0 376
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தொடக்க விழா அய்யம்பாளையம் ஊராட்சிக்கு ஒன்றிய தொடக்கப்பள்ளி,
திருப்பைஞ்ஞீலீ ஊராட்சிக்கு ஒன்றிய தொடக்கப்பள்ளி,
நெ.2.கரியமாணிக்கம் ஊராட்சியில் சிறுகாம்பூரில் உள்ள ரெங்கா திருமண மண்டபம் ஆகிய மூன்று கிராம ஊராட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் நேரலையில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நெ.2.கரியமாணிக்கம் ஊராட்சியில் மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் கதிரவன் அவர்களும் அய்யம்பாளையம் ஊராட்சியில் வட்டார பெருந்தலைவர் ஶ்ரீதர் அவர்களும் தலைமை தாங்கி சிறப்பு உரை ஆற்றினார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன்,உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் மோகன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை துணை இயக்குநர் மல்லிகா மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி, தோட்டக்கலை உதவி இயக்குநர் பத்மாவதி, வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா, தோட்டக்கலை அலுவலர் சுரேஷ், துணை வேளாண்மை அலுவலர் சின்னப்பாண்டி, வேளாண்மை உதவி அலுவலர்கள் ஆனந்து , பாஸ்கர், பாலாஜி, பார்த்திபன், பாபு,பன்னீர் செல்வம், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் பிரபாகரன், வரதராஜன், ராஜேந்திரன், சதீஷ் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பூபதி மற்றும் உதவி தொழில்நுட் ப மேலாளர் ராகினி, மாவட்ட பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் முன்னோடி விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, கூட்டுறவு துறை, உள்ளிட்ட பிற துறை சார்ந்த அலுவலர்களும் இதில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.