திருச்சி அமிர்தவித்யாலயம் பள்ளியில் சிந்தனைத் திருநாள் கொண்டாட்டம்

0 331
Stalin trichy visit

திருச்சி அமிர்தவித்யாலயம் பள்ளியில் சிந்தனைத் திருநாள் கொண்டாட்டம்…
சாரண சாரணியர் இயக்கத்தின் நிறுவனர் பேடன் பவல் அவர்களின் பிறந்தநாள் சிந்தனைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. (Thinking Day) அதன் நிகழ்ச்சியாக நமது பள்ளியில் கொண்டாடப்பட்டது. நமது பள்ளி சாரண சாரணியர் பள்ளி வளாகம் முழுவதும் (பாலிதீன் மற்றும் பேப்பர்களை நீக்கி ) தூய்மை செய்தனர்.பின் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி க்கு ஜெயரெங்க இயற்கை மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர். சுகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு உணவு பழக்கவழக்கம் மற்றும் உணவே மருந்து, ஆரோக்கிய வாழ்க்கைமுறை பற்றி கூறினார். மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டன. பின் மாணவர்கள், முதல்வர், சிறப்பு விருந்தினர் ஆகியோர் 25 மரங்களைப்பள்ளி வளாகம் முழுவதும் வைத்தனர். இந் நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர். திருமதி. உஷா ராகவன் அவர்கள் தலைமை தாங்கி நடத்திவைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சாரண ஆசிரியர்கள் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.