வேளாண் கிராம முன்னேற்ற குழு கூட்டம்
திருச்சி மாவட்டம் இலால்குடி அருகே புதுர் உத்தமனூர் கிராமத்தில் வேளாண் கிராம முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது
இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க வேளாண்மை உதவி இயக்குநர் சுகுமார் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்,கிராம முன்னேற்ற குழு கூட்டம் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள்,தமிழ் மண்வளம் செயலி பயன்படுத்துதல் ,மண் மாதிரி சேகரிப்பு அவசியம் மற்றும் மண் மாதிரி அடிப்படையில் உர நிர்வாகம் அளித்தல்,தரிசு நிலம் மேம்பாடு திட்டம் பற்றி விரிவாக விளக்கி கூறினார.குமுளூர் வேளாண்மை கல்வி நிறுவன உதவி பேராசிரியர் விஜய் நெல் சாகுபடியில் நுண்ணூட்டஉரத்தை பயன்படுத்துதல், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விளக்கி கூறி விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலுரை அளித்தார். வேளாண்மை உதவி அலுவலர் செல்வி.கவிதா , விவசாயிகளுக்கு மானிய திட்டங்கள் பற்றி கூறினார்.அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சபரிச் செல்வன் அட்மா திட்டசெயல்பாடுகள் ,
விவசாயிகள் கௌரவ நிதி திட்டம் பற்றி விளக்கி கூறினார்கள்..கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் உழவன் செயலி பயன்பாடுகள் விளக்கி கூறி உழவன் செயலி பதிவிறக்கம் செய்து கொடுத்தார். இக்கூட்டத்தில் புதுர் உத்தமனூர் கிராமத்தை சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர்,பல முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர் .