இடைத்தேர்தல் வெற்றி : த.வெ.க. வழக்கறிஞர் அணி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திருச்சி, அக்.10 தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றதை தொடர்ந்து திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் அணி சார்பில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் வரகனேரி சசிகுமார், எஸ் பி சௌந்தர்ராஜன், புவனேஸ்வரி, கள்ளிக்குடி செந்தில்குமார், லதா மங்கேஷ்கர், பிரியா, முல்லை சுரேஷ், சேது மாதவன், கனிமொழி, சுரேஷ் ராஜ் மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.