அதிமுக நிர்வாகி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற முன்னாள் எம்.பி.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள அதிமுக தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அதிமுகவின் 12 வது வார்டு கவுன்சிலர் பிறந்தநாள் விழாவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப. குமார் பங்கேற்று வாழ்த்தினார்.
புள்ளம்பாடி அருகே வெங்கடாசலப்புரத்தைச் சேர்ந்தவர் ஜெனிபர் ஜெனிவா ஹென்றி பிரபாகரன். இவர் புள்ளம்பாடி ஊராட்சி் ஒன்றியத்தில் 12 வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு பிறந்தநாள். இந்த பிறந்தநாளை முன்னிட்டு புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் ஏற்பாட்டில் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அதிமுக அலுவலகத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட்டினர் இவ்விழாவில் கலந்து கொண்ட திருச்சி புற நகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் எம்பி யுமான ப. குமார் பங்கேற்று 12வது வார்டு கவுன்சிலர் ஜெனிபர் ஜெனிவா ஹென்றி பிரபாகரனை வாழ்த்தினார்.

click the image to chat on whatsapp
இந்நிகழ்வில் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், மாவட்ட அவை தலைவர் அருணகிரி, மாவட்டம் மகளிர் அணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ்,பொதுக்குழு உறுப்பினர் விஜயா மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.