அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

0 385
Stalin trichy visit

திருச்சி ஏப்.21 அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை நடக்கிறது.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும்,முன்னாள் துணை மேகமான ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெண்களை ஆபாசமாக பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிச்சாமியின் ஆணைக்கிணங்க அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தலின்படி கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் திருச்சி ஒத்தக்கடை பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் நடக்கிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாநகர் மாவட்ட செயலாளார் ஜெ.சீனிவாசன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.