விவசாயியை தாக்கி ரூ.20 ஆயிரம் பறிப்பு

0 14
Stalin trichy visit

திருச்சி, ஆக. 28 திருச்சி மாவட்டம் துறையூர் தண்ணீர் பள்ளம் சோழமதி தென் புறநாடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 55). விவசாயி. இவரது மகள் சசிகலா மற்றும் பேத்தி சுபஸ்ரீ ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பார்ப்பதற்காக திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திற்கு சங்கர் வந்தார்.

திருச்சி -கரூர் பைபாஸ் சாலையில் கலைஞர் அறிவாலயம் அருகே அவர் சென்றபோது, அவரது டவுசர் பையில் இருந்த ரூ.20 ஆயிரத்தை எடுத்தார். அப்போது அவ்வழியாக வந்த 3 மர்மநபர்கள், சங்கரை தாக்கிவிட்டு பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சங்கர் கொடுத்த புகாரின்பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து, மர்மந பர்களை தேடி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.