அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
திருச்சி, ஏப்.14 திருச்சி மாவட்டம் துறையூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனூர் பகுதியில் இருந்து இன்று தேமுதிகவை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியை விட்டு விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தங்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களை ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தெற்கு ஒன்றிய மாணவர் அணி ஒன்றிய செயலாளர் சிவசாந் மனோகரன் மற்றும் ஆதனூர் கிளை கழக செயலாளர் ரங்கராஜ் உள்பட கழக நிர்வாகிகள் இருந்தனர்.