திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் அமுதபெருவிழா நிகழ்ச்சி
75 வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா ( Azadi ka Amrit Mohotasav ( AKAM ) தின நிகழ்ச்சி திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று தொடங்கியது.

இதில் வீட்டிலிருந்து உற்பத்தியாகும் குப்பை கழிவுகளை பயன்படுத்தி அதனை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மறுசுழற்சி செய்து, அதில் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்றது.

பொதுமக்கள் , மறுசுழற்சி உற்பத்தியாளர்கள் , கைவினைப் பொருள் கலைஞர்கள் , மகளிர் சுயஉதவிக்குழக்கள் , தங்களது கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் சிறந்த கைவினை பொருள் தயாரித்த கலைஞருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.