தொலைத்தொடர்பு இல்லாமல் படிப்பையும், அத்தியாவசிய தேவையும் இழந்து நிற்கும் மக்கள் – திருச்சி அருகே உள்ள கிராமத்தின் கண்ணீர் கதை இது!
கத்தி படத்தில் தன்னூத்து கிராமம் போல திருச்சி அருகே “கண்ணுத்து” கிராமம் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அடிப்படைத் தேவையான செல்போன் டவர் இல்லாததால் அப்பகுதி முழுவதும் வெளிச்சம் இருந்தும் இருளில் மூழ்கி உள்ளது.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தலுகாவில் 49 கிராமங்கள் உள்ளது. இதில் அடிப்படை வசதிகளில் கண்னூத்து கிராமம் பின்தங்கிய காணப்பட்டு வருகிறது. இக்கிராமத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

மலைகள் சூழ்ந்த காட்டு பகுதியில் இருக்கும் இக்கிராமத்தில் பலர் மேற் படிப்புகளைப் படித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள பலர் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் அடிப்படைத் தேவையான தொலைபேசி அழைப்புகள் கூட பேச முடியாத அவல நிலையில் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். அப்பகுதியில் செல்போன் டவர் இல்லாததால் பலர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் ஆன்லைன் படிப்புகளுக்கு கூட அப்பகுதி மாணவர்கள் கற்க முடியாத சூழ்நிலையில் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில்….அவசர அவசிய தேவைகளுக்கு கூட ,இது நாள் வரை தொலைபேசி பயன்படுத்த முடியவில்லை. எங்கள் அப்பகுதியில் செல்போன் டவர் இல்லாததால் மக்கள் அவசர தேவைகளுக்கு மருத்துவமனை அரசு அலுவலகங்களை கூட தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. பிரசவ காலங்களில் கூட தொலை தொடர்பு வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் சேவையை கூட பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமப்படுகிறோம். இதனால் பல நேரங்களில் உயிரிழக்கும் அவலத்தையும் சந்தித்து வருகிறோம்” வேதனையுடன் கூறுகின்றனர்.

மேலும் மலைப்பகுதி என்பதால் விஷப் பாம்புகள் கடித்து உரிய நேரத்தில் மருத்துவமனை கொண்டு செல்ல முடியாமல் விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலியாகும், சோக நிகழ்வுகளும் ஏற்கனவே குழந்தை (மகப்பேறு) பிரசவத்திற்கு அவசர காலங்களில் இரு குழந்தைகள் இழந்து தவிக்கும் தாய்மார்கள் கூறுகின்றனர்.
மேலும் விலங்குகள் (காட்டெருமை) தொல்லையால் மக்கள் இரவை பகலாக்கி வாழ்ந்துவருகின்றனர். செல்போன் டவர் வசதி இல்லாத காரணத்தினால் இப்பகுதி மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்பும் எட்டாக்கனியாகவே உள்ளது. வயதான முதியவர்கள் முதியோர் பென்ஷன் வாங்கும் 3கிலோ மீட்டர் தூரம் வரை உடைய எலமனம் எனும் ஊருக்கு சென்று தங்களின் கைவிரல் ரேகைகளை பதிவு செய்து பணம் பெற்று வருகின்றனர். மேலும் மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூணு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எலமனம் என்ற ஊருக்குச் சென்று அங்கு போனில் பேசிவருகின்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில்…. முதல்வர் ஸ்டாலின் தான் எங்கள் கிராம மக்களின் 30 ஆண்டுகால டவர் இல்லாத பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும், உணவு உடை, உறைவிடம் ,மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்து தர ஒன்றிய அரசின் கடமையாக வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
21ம் நூற்றாண்டிலும் தமிழகத்தில் திருச்சி மாவட்டத்திற்கு அருகில் தொலைதொடர்பு அற்ற நிலையில் ஒரு கிராமம் அவதிப்படுவது என்பது வேதனையின் உச்சம். தொலை தொடர்பு என்பது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்ணூர் மக்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து தமிழக அரசு இந்த கிராமத்தில் தொலைதொடர்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் .னஎன்பதே கிராம கல்லூரி பயிலும் இளைஞர்கள், மற்றும் பொது மக்களின் வேண்டுகோள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo