கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சடலமாக மீட்பு

0 208
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 27  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் மின்மோட்டாரை பழுது பார்க்கும் போது 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவரை சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுப்பத்தூர் ஊராட்சியில் உள்ள வடக்கு சாலப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (57) . இவர் திருவெள்ளறை கிராமத்தைச் சேர்ந்த பழனியாண்டி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மின் மோட்டார் பழுது பார்ப்பதற்காக இறங்கி உள்ளார் அப்போது அவரது காலில் மின் ஒயர் சிக்கியுள்ளது.
இதில் நிலை தடுமாறிய பாலசுப்ரமணியன் 80 அடி ஆழ கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.இது குறித்து சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சமயபுரம் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் வீரர்கள் சதீஷ்குமார், பிரான்சிஸ் அலெக்சாண்டர், பெரியசாமி, தர்மராஜா, வெங்கடேஷ், விக்னேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தவறி விழுந்த பாலசுப்ரமணியனை சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.