தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதிக்குடியில் உள்ள போர்ட் செட் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லால்குடி அருகே ஆதிகுடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஒண்டிமுத்து. இவரது மனைவி 65 வயதான மைனாவதி. இந்நிலையில் கடந்த 23ம் தேதி மதியம் ஒண்டி முத்து அங்குள்ள போர் செட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த மைனாவதிக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு எதிர்பாராதமாக தண்ணீர் தொட்டிக்குகள் தவறி விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.