வீட்டின் பூட்டை உடைத்து 11 1/2 பவுன் நகை திருட்டு

0 282
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சணமங்கலம் ஊராட்சியில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 11 1/2 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

மண்ணச்சநல்லூர் அருகே சணமங்கலம் கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் 30 வயதான செந்தில் வேலவன்.இவர் விவசாயம் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி திருமண நிகழ்ச்சிக்காக சென்று விட்டார். பின்னர் செந்தில் வேலவன் வீட்டை பூட்டி விட்டு விவசாய வேலைக்காக வயலுக்கு சென்று விட்டார். வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 11 1/2 பவுன் தங்க நகைகளை திருடிடி சென்றனர்.

இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் செந்தில். வேலவன் புகார் கொடுத்தார்.புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலு வீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.