சிலிண்டர் ஆய்வை இலவசமாக நடத்த வேண்டும் : நுகர்வோர் கோரிக்கை
லால்குடி தனியார் மண்டபத்தில் சிலிண்டர் ஆய்வை இலவசமாக செய்ய வேண்டும். குறை தீர்க்கும் கூட்டத்தில் நுகர்வோர் கோரிக்கை
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருவாய்த்துறை சார்பில் கேஸ் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
லால்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருவாய்த்துறை சார்பில் கேஸ் நுகர்வோர்களுக்கான காஸ் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. திருச்சி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சுப்பையா தலைமை வகித்தார். தாசில்தார் ஸிசிலினா சுகந்தி, வட்ட வழங்கல் அலுவலர் முருகன், வருவாய் அலுவலர் இளவரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பாரதிய கிசான் சங்க வீரசேகரன், இந்திய கம்யூ. பிரமுகர் மணிகண்டன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஸ் நிறுவனங்கள் நடத்தும் ஆய்வை இலவசமாக நடத்த வேண்டும். காஸ் நுகர்வோருக்கு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சிலிண்டரை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள், குறைகளை தெரிவித்தனர்.