சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி பலி

0 367
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் மாருதி நகரில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது கார் மோதிய விபத்தில் பலியானார்.

நம்பர் 1 டோல்கேட் சேலம் சாலையைச் சேர்ந்தவர் கலியன்.இவரது மனைவி 80 வயதான பொன்னி. இவர் நேற்று மாலை மாருதி நகரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது திருச்சியில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற கார் மூதாட்டி மீது மோதியதில் படுகாயமடைந்தார்.விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.